தமிழகத்தில் வெப்ப அலை தீவிரம், இன்று ஓரிரு இடங்கள் 44/45⁰ எட்ட வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம் நீடித்து வருகிறது. நேற்று திருத்தணி மற்றும் வேலூர் பகுதிகளில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 43 டிகிரி அளவை எட்டியது.  இந்த நிலை அடுத்த ஓரிரு தினங்களக்கும் நீடிக்கும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. இந்நிலையில் இன்று வெப்ப அலை மிக தீவிரமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இன்று தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் சில பகுதிகளில் அதிதீவிர வெப்ப அலை தாக்கம் நிலவ கூடும்.  குறிப்பாக வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த வெப்ப அலையின் தாக்கம் மிக அதிகமாக இருக்க கூடும்.  ஒரு சில இடங்களில் பகல் நேர அதிக பட்ச வெப்ப நிலை 44 / 45  டிகிரி வரை எட்ட கூடும்.

24_1_1

தமிழகத்தில் பரவலாக  வெப்ப நிலை 40 டிகிரியை ஒட்டியே இருக்கும்.   மத்திய மற்றும் வட தமிழக மாவட்டங்களில் பரவலாக வெப்ப நிலை 42 டிகிரி அல்லது அதற்கும் அதிகமாக இருக்க கூடும்.  சென்னையின் மேற்கு புறநகர் பகுதிகளில் மீண்டும் பகல் நேர வெப்பம் சென்னை நகரை காட்டிலும் ஓரிரு டிகிரி அதிகமாக இருக்க கூடும்.