தமிழகத்தில் வெப்ப அலை சற்று குறைய வாய்ப்பு

நேற்று தமிழகத்தின் பல இடங்களில் வாட்டிய வெப்ப அலை காரணமாக தர்மபுரியில் வரலாற்றின் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது.  இதே போல் மதுரை மற்றும் தொண்டியில் ஏப்ரல் மாதத்தின் மிக அதிக வெப்ப நிலை நேற்று பதிவாகியது.  சென்னையில் கடல்காற்று காரணமாக வெப்ப நிலை குறைந்தே நிலவிய போதிலும் ஏனைய பகுதிகளில் மிக அதிகமாக இருந்தது.  குறிப்பாக தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் இந்த வெப்ப அலை மிக தீவிரமாக நிலவியது.

இன்று காற்றின் திசை சற்று எதுவாக இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  இதன் காரணமாக வெப்ப நிலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது.

25_1

கடந்த சில தினங்களாக காற்றின் திசை மேற்கு பகுதியில் இருந்து வீசியது சில சமயங்களில் வாடா மேற்கு திசையில் இருந்தும் வீசியதால் தரை காற்று அதிக வெப்பத்துடன் வீசியது.  இதுவே கடந்த சில தினங்களாக வெப்ப நிலை அதிகமாக நிலவ ஓர் காரணம்.  இந்நிலையில் இன்று காற்றின் திசை தென் கிழக்கில் இருந்து வீச கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன இதன் காரணமாக வெப்ப நிலையில் ஓரிரு டிகிரி குறைய கூடும்.  குறிப்பாக கடலோர தமிழக பகுதிகளில் வெப்ப நிலை நன்கு குறைய கூடும்.  உட்புற பகுதிகளிலும் கடல் காற்றின் வீரியம் இருப்பது பொருத்து வட தமிழக பகுதிகளிலும் சற்று குறைய கூடும்.

25_1_1