தமிழகத்தில் வெப்ப நிலை மேலும் சற்று குறைய வாய்ப்பு

நேற்று தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை கடந்த சில தினங்களை விட குறைத்து காணப்பட்டது.  ஞாயிறு அன்று திருப்பத்தூர், வேலூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் 43 டிகிரிக்கும் மேல் நிலவிய வெப்ப நிலை நேற்று கரூர், சேலம், திருத்தணி ஆகிய பகுதிகளில் 41 டிகிரி அளவை எட்டியது.  ஏனைய பகுதிகளிலும் வெப்ப நிலை ஓரிரு டிகிரி குறைந்தே காணப்பட்டது.

26_1

நேற்று போல் இன்றும் பகல் நேரத்தில் காற்றின் திசை தெற்கு / தென்கிழக்கில் இருந்து அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதால் பகல் நேர வெப்ப நிலை சற்று குறைந்தே இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  மேலும் கடலோர பகுதிகளில் பரவலாக வெப்ப நிலை 35 / 36  டிகிரி அளவை ஒட்டியே இருக்க கூடும்.  இரவு நேர வெப்ப நிலையிலும் சற்று கீழ் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை படிவங்கள் கோடிட்டு காட்டுகின்றன.

26_1_1

மேலே உள்ள அட்டவணையில் இருப்பது போல் தமிழகத்தின் உட்புற பகுதிகளில் மேலும் ஓரிரு டிகிரி குறைய கூடும்.  இரவு நேர தட்பவெப்பம் சற்று மிதமாக நிலவ கூடும்.