தமிழகத்தில் வெப்பநிலை சற்று உயர வாய்ப்பு

கடந்த ஓரிரு தினங்களாக சற்று குறைந்து இருந்த பகல் நேர வெப்ப நிலை இன்று முதல் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது.  நேற்று கரூர் மற்றும் தர்மபுரியில் மட்டுமே 40 டிகிரி அளவை தாண்டியது.  மற்ற அனேக இடங்களில் அதிகபட்ச வெப்பம் குறைந்தே காணப்பட்டது.  நேற்று கிழக்கில் இருந்து பரவலாக காற்று வீசியதால் மேற்கு கடலோர பகுதிகளில் வெப்ப நிலை உயர்ந்தது.  கேரளாவின் பாலக்காட்டில் அதிகபட்ச வெப்பமாக 41.2 டிகிரி பதிவாகியது

28_1_3

கடந்த இரு தினங்களாக காற்றின் திசை தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் இருந்து வீசியதால் வெப்ப நிலை சற்று குறைந்து இருந்தது.  வானிலை படிவங்கள் இன்று காற்றின் திசை தெற்கு / தென்மேற்கு திசையில் இருந்து வீச அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கின்றன. இதன் காரணமாகவே உட்புற பகுதிகளில் வெப்ப நிலை உயர கூடும்.  தமிழகத்தில் பரவலாக அதிகபட்ச வெப்ப நிலை 39 / 40 டிகிரி அளவை ஒட்டியே நிலவும்.  ஓரிரு இடங்களில் 41 டிகிரி வரை எட்ட வாய்ப்பு உள்ளது.  இதே போல் தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலும் பகல் நேர வெப்ப நிலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் அதிகபட்ச வெப்பம் 44 டிகிரி அளவை எட்ட கூடும்.

28_1_4