கடலோர தமிழகத்தில் மிதமான பகல் நேர வெப்பம் நீடிப்பு

கடந்த சில தினங்களாக கடலோர தமிழகத்தில் சற்றே மிதமான பகல் நேர வெப்பம் நீடித்து வருகிறது.  உட்புற பகுதிகளில் 39 / 40  டிகிரி அளவில் நீடித்து வரும் வெப்பம் கடலோர பகுதிகளில் 35 / 36  டிகிரி அளவே நிலவி வருகிறது. பரவலாக தென் திசையில் இருந்து காற்று வீசுவதால் வெப்ப நிலை மிதபடுத்த படுகிறது.

இந்த நிலை மேலும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  உட்புற பகுதிகளில் வெப்ப நிலை உயர்ந்தே காணப்பட்டலும் கடலோர பகுதிகளில் முற்பகல் பொழுதில் கிழக்கில் இருந்து வரும் கடற்காற்று காரணமாக வெப்பம் அதிகம் உயராமல் நிலைபடுகிறது.  கடந்த வாரம் தமிழகத்தில் வெப்ப அலை நிலவிய பொது தரை காற்று மேற்கு / வட மேற்கு திசையில் இருந்து வீசியதலேயே வெப்ப நிலை மிக அதிகமாக இருந்தது.  தற்பொழுது அடுத்த சில தினங்களுக்கு காற்றின் திசை பொதுவாக தெற்கு பகுதியில் இருந்து வீச கூடும் என்பதால் வெப்ப அலை வீச வாய்ப்பு சற்று குறைவே என கொள்ளலாம்.

29_4

சென்னை, புதுச்சேரி போன்ற கடலோர பகுதிகளில் இன்றும் பகல் நேர அதிகபட்ச வெப்பம் 35 / 36  டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும்.  வடக்கு மற்றும் மேற்கு தமிழகத்தின் உட்புற பகுதிகளில் வெப்ப நிலை 40 டிகிரி மற்றும் அதனை ஒட்டிய அளவு நிலவ கூடும் என வானிலை படிவங்கள் எதிர்பார்கின்றன.