வட தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும்

கடந்த வாரத்தில் சற்றே குறைந்து காணப்பட்ட வெப்ப நிலை நேற்று முதல் மீண்டும் உயர துவங்கி உள்ளது.  நேற்று அதிகபட்சமாக கரூரில் 41.5 டிகிரி பதிவாகியது.  இதே போல் சேலம், வேலூர் மற்றும் திருத்தணியில் 41 டிகிரி அளவை தாண்டி பதிவாகியது. சென்னையிலும் கடந்த சில தினங்களை விட வெப்ப நிலை 2 டிகிரி அளவிற்கு அதிகமாக இருந்தது. 2_5

இன்றும் முற்பகல் பகுதியில் பரவலாக காற்றின் திசை தென் மேற்கிலிருந்து வீச கூடும். இந்த நிலகாற்று காரணமாக வெப்ப நிலை உயர்ந்தே நிலவ கூடும்.  குறிப்பாக வட தமிழகம் மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.  திருப்பதி முதல் விஜயவாடா வரை உள்ள ஆந்திர பகுதிகளில் ஒரு சில இடங்களில் வெப்ப நிலை 45 டிகிரி வரை எட்ட வாய்ப்பு உள்ளது.

2_5_1

தமிழகத்தை பொறுத்த வரை வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகபட்சமாக நிலவ கூடும்.  வேலூர் மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளில் 42 / 43  டிகிரி வரை எட்ட வாய்ப்பு உள்ளது.  இதே போல் சென்னையில் இன்று நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய இரண்டு வானிலை மையங்களில் வெப்ப நிலை 100 டிகிரி பாரென்ஹீட் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் காற்றின் பிளவு கோடு காரணமாக மாலை நேரங்களில் மழை வாய்ப்பு உள்ளது.