தமிழகத்தின் மேற்கு உட்புற பகுதிகளில் மழை வாய்ப்பு

இன்று முதல் அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம் ஆகிறது.  தமிழகத்தின் அதிகபட்ச வெப்ப நிலை ஆண்டின் இந்த பகுதியிலேயே பதிவாகிறது.   இந்நிலையில் இன்று வெப்ப நிலை சற்று குறைந்து காணப்படும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. குறிப்பாக கடலோர பகுதிகளில் கிழக்கில் இருந்து வரும் காற்று காரணமாக பகல் நேர வெப்பம் அதிக தாக்கம் இல்லாமல் இருக்க கூடும்.

4_5

தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் நிலவி வரும் காற்று பிளவு கோடு காரணமாக இன்று தென் இந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது.  கீழை மற்றும் மேலை காற்று கூடும் காரணமாக வளிமண்டலத்தில் உருவாகும் நிலையற்ற தன்மை இந்த மழை வர ஏதுவாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தெற்கு மற்றும் மேற்கு உட்புற பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.  தெலுங்கானா மற்றும் உட்புற கர்நாடகா பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை வாய்ப்பு உள்ளது.

4_5_1

தமிழகத்தை பொறுத்த வரை வெப்ப நிலை சற்று குறைந்து இருக்க வாய்ப்பு உள்ளது.  உட்புற பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி அளவை ஒட்டி நிலவ கூடும்.  கடலோர பகுதிகளில் வெப்ப நிலை 36 / 37  டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும். இரவு நேர வெப்ப நிலையை பொறுத்த வரை பரவலாக சமவெளி பகுதிகளில் 29 / 30 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும்.