உட்புற பகுதிகளில் மழை தொடர வாய்ப்பு, கடலோர பகுதிகளில் வெப்பம் குறைந்து காணப்படும்

கத்திரி வெய்யில் காலத்தின் முதல் நாளான நேற்று தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை சற்று குறைந்து காணப்பட்டது.  உட்புற பகுதிகளில் பல இடங்களில் மழையும் பெய்ததது.  மதுரை அடுத்த திருமங்கலம் பகுதியில் 5 மிமீ மழை பதிவாகியது.  இதே போல் தேனி மாவட்டத்தில் சில பகுதிகளிலும் மழை பதிவாகியது.

இன்றும் பரவலாக வெப்ப நிலை சற்று குறைந்தே காணப்படும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  குறிப்பாக கடலோர பகுதிகளில் கிழக்கில் இருந்து வரும் காற்று காரணமாக பகல் நேர வெப்பம் 36 டிகிரி அளவை ஒட்டியே இருக்கும்.

5_5

உட்புற பகுதிகளிலும் பிற்பகல் நேரத்தில் மழை மேகம் உருவாக வாய்ப்பு உள்ளதால் வெப்ப நிலை சற்று குறைய கூடும்.  உட்புற பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 39 / 40 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும்.

5_5_1

நேற்று போல் கிழக்கு மற்றும் மேற்கத்திய காற்று குவிதல் காரணமாக தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் மழை பெய்ய கூடும்.  மேற்கு தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.