சென்னையில் மீண்டும் வெப்ப நாட்கள் துவக்கம்

கடந்த வாரத்தில் சில நாட்கள் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. வங்க கடலில் நிலவி வந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், தென் மேற்கு பருவ காற்றின் வேகம் பலமாக இருந்ததாலும் தட்ப வெப்பம் சற்று மிதமாக நிலவி வந்தது.

நம் எல்லோருக்கும் மிதமான தட்ப வெப்பம் நிலவ வேண்டும் என்று ஆசை இருந்தாலும் வானிலை என்பது அதன் வட்டத்திற்கு ஏற்ப சுற்றுவது. நேற்று 37 டிகிரி வரை தொட்ட பகல் நேர வெப்பம் மேலும் சில நாட்களுக்கு இந்நிலை தொடர கூடும். தென் மேற்கு பருவ காற்று மிகவும் வீரியமாக உள்ளத்தால் மதிய / மாலை நேரங்களில் கிழக்கிலிருந்து வரும் கடல் காற்று வலு பெற இயலாமல் தடுமாறும் நிலை உருவாகி உள்ளது. இதனால் மாலை நேரங்களும் சற்றே வெப்பமாக உள்ளது.

Weather_map

இன்று வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை வாய்ப்பு உள்ளது. சென்னைக்கு தென் மேற்கு பகுதிகளில் இந்த மழை பெய்ய கூடும், இந்த மழை மேகங்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து கடல் செல்லும் வழியில் தாம்பரம் ஒட்டிய பகுதிகளில் மழை வாய்ப்பு உள்ளது