உட்புற தமிழகத்தில் பலத்த மழை, இன்றும் சில இடங்களில் தொடர வாய்ப்பு

நேற்று உட்புற தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்தது.  குறிப்பாக கரூர், திருச்சி, சேலம், பெரம்பலூர், திண்டுக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பதிவாகியது.   காற்றின் பிளவு கோடு காரணமாக வளிமண்டலத்தில் ஏற்படும் நிலையற்ற தன்மை காரணமாக ஏற்படும் இந்த கோடை மழை கீழை காற்று மேலை காற்றாக மாற துவங்கும் காலத்தை குறிக்கும்.  Tamil_Nadu_Rains

இன்று வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  நேற்று இரவு உருவாகிய இடி மேகங்கள் சில காலை வரை இருக்க கூடும்.  இதன் காரணமாக மேல் அடுக்கு பகுதிகளில் சற்று ஈரப்பதம் நிலவ கூடும். இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும்.

Tamil_Nadu_Rains_1

இன்றும் உட்புற தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக கிருஷ்ணகிரி, சித்தூர், கோலார் ஆகிய இடங்களை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.  இதே போல் தென் தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய கூடும்.