தமிழகத்தில் கோடை மழை தொடர்கிறது

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கோடை மழை நேற்றும் தமிழகத்தின் பல இடங்களில் பெய்தது. குறிப்பாக கோயம்புத்தூர், நாமக்கல், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் இந்த மழை நேற்று பதிவாகியது.

இன்றும் உட்புற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  நேற்று போல் இன்றும் கோவை / சேலம் / ஈரோடு / சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  இதே போல் வடக்கு உட்புற பகுதிகளிலும் மழை பெய்ய கூடும். வேலூர் மாவட்டத்தில் மாலை அல்லது இரவு பொழுதில் மழை இருக்க கூடும்.  வடக்கு கடலோர பகுதிகளில் காலை நேரம் கிழக்கில் இருந்து வரும் ஈரப்பதம் காரணமாக ஓரிரு இடங்களில் தூறல் மழை இருக்க வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக வட கடலோர பகுதிகளில் வெப்ப நிலை சற்று குறைந்து காணப்படும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன

9_5_4