தமிழகத்தில் வெப்ப நிலை சற்று குறைந்து காண வாய்ப்பு

கடந்த வாரத்தை விட நேற்று தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை சற்று குறைந்து காணப்பட்டது.  குறிப்பாக உட்புற பகுதிகளில் வெப்ப நிலை நன்கு குறைந்து இருந்தது.  திருத்தணியில் மட்டுமே பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 40  டிகிரி அளவை தொட்டது. ஏனைய அணைத்து பெரிய நகரங்களிலும் வெப்ப நிலை 38 டிகிரி அளவை ஒட்டியே இருந்தது.   காற்றில் இருந்த வரும் ஈரப்பதம் காரணமாக ஏற்படும் மேக மூட்டமான வானிலை வெப்ப நிலை சற்று குறைந்து இருக்க உதவுகிறது.

தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் காற்றின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள பிளவு கோடு (கீழை மற்றும் மேலை காற்று சந்திப்பது) காரணமாக கோடை மழை பெய்து வருகிறது.  தென்மேற்கு பருவ காலம் துவங்கும் நாள் அதிக தூரம் இல்லை என்பதை குறிப்பிட்டு காட்டும் கால மாற்றமே இந்த காற்றின் பிளவு கோடு.  அடுத்த ஓரிரு வாரங்களில் காற்றின் திசை கிழக்கில் இருந்து மேற்கிற்கு மாற துவங்கும்.

10_5_1

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இன்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது நீலகிரி மலை பகுதிகள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

10_5

வெப்ப நிலையை பொறுத்த வரை பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை கடந்த வாரத்தை விட இன்றும் சற்று குறைந்தே காணப்படும். உட்புற பகுதிகளில் பரவலாக வெப்ப நிலை 38 டிகிரி அளவை ஒட்டியே இருக்க கூடும். ஓரிரு இடங்களில் 40 டிகிரி அளவை எட்ட வாய்ப்பு உள்ளது.  மேக மூட்டமான வானிலை இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன இதன் காரணமாக வெப்ப நிலை சற்று குறைந்து இருக்க கூடும்.  பூமத்திய ரேகையை ஒட்டிய கடற் பகுதிகளில் அடுத்த சில தினங்களில் ஓர் சலனம் உருவாக வாய்ப்பு இருப்பதால் வரும் நாட்களில் தென் தமிழக பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.