தமிழகத்தில் வெப்ப நிலை குறைந்து காண வாய்ப்பு

தமிழகத்தில் நேற்று பரவலாக வெப்ப நிலை குறைந்து நிலவியது.  அதிகபட்சமாக திருத்தணியில் 39.5 டிகிரி பதிவாகியது.  இன்றும் வானிலை படிவங்கள் வெப்ப நிலை குறைந்து இருக்கும் என கணிக்கின்றன.  இந்நிலையில் தெற்கு வங்க கடல் பகுதியில் ஓர் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை துறை எதிர்பார்கிறது.

வங்க கடலில் அடுத்த சில தினங்களில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் உருவாக கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. தற்பொழுது உள்ள நிலையில் இந்த சலனம் எவ்வாறு உருமாற கூடும் என்பது எங்கு இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் உருவாகுவதை பொருத்து மாற கூடும் என்பதால் தற்பொழுது நாம் பொருத்து இருக்க வேண்டும்.

12_5_3

இன்று தமிழகத்தில் வெப்ப நிலை மிதமாக நிலவ கூடும்.  குறிப்பாக தென் தமிழக பகுதிகளில் வெப்ப நிலை ஓரிரு டிகிரி குறைந்து காணப்படும்.  முற்பகல் நேரங்களில் வானிலை சற்று மேக மூட்டமாக இருக்க கூடும் இந்த காரணமாக வெப்ப நிலை அதிக உயர வாய்ப்பு குறைவு என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வாய்ப்பு மாலை / இரவு நேரங்களில் இருக்க கூடும்.