வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி வாய்ப்பு

நேற்று நமது வலை பதிப்பில் கோடிட்டு காட்டியது போல் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 – 48  மணி நேரங்களில் உருவாக வாய்ப்பு உள்ளது.  கடந்த சில நாட்களாக வானிலை படிவங்களில் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பகுதி பற்றி வேறுபாடு நிலவி வந்தது.  நேற்று முதல் முக்கிய வானிலை படிவங்கள் இடையே உருவாகும் இடம் பற்றி சற்றே ஒத்த கருத்து நிலவ துவங்கி உள்ளது. அனேக வானிலை படிவங்கள் தற்பொழுது இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஓரிரு நாட்களுக்குள் உருவாக கூடும் என கணிக்கின்றன

13_5_1

பரவலாக வானிலை படிவங்கள் இடையே இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி முதலில் வடமேற்கு திசையில் நகர்ந்து பின் வலு பெற்று வடக்கு / வடகிழக்காக நகர கூடும் என எதிர்பார்கின்றன.  குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வரை இதன் வலு மற்றும் பாதைகளில் வேறுபாடுகள் இருக்க கூடும்.