வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி, தேர்தல் நாள் பதிப்பு அடையக்கூடும்

வங்க கடலில் இலங்கை அருகே நேற்று இரவு குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த ஆண்டின் முதல் வெப்ப மண்டல கலக்கம் இதுவே. இன்று காலை ஐந்து மணி நிலவரப்படி இலங்கைக்கு கிழக்கே தென்கிழக்கே 200 கிமீ அளவில் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது.

15_5_2இந்நிலையில் நாளை தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக வாக்கு பதிவு சற்று பதிப்பு அடைய கூடும்.  தென் தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் பரவலாக மழை துவங்கி சில இடங்களில் இரவு பொழுதில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

15_5

புதுச்சேரிக்கு தெற்கே உள்ள கடலோர தமிழகத்தில் நாளை காலை முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  சில இடங்களில் சற்று மிதமாகவும் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது.  இந்த பகுதிகளில் வாக்கு பதிவு பெரும்பாலும் பாதிப்பு அடையாது. வட தமிழத்தில் வானம் மேக மூடமாகவும் மாலை பொழுதில் மழை பெய்ய கூடும்.  வட தமிழகத்தை பொறுத்த வரை வாக்கு பதிவில் பாதிப்பு எதுவும் நிலவ வாய்ப்பு குறைவே, உட்புற தமிழகத்தில் பரவலாக வாக்கு பதிவில் எந்த பாதிப்பும் இருக்காது.