இலங்கை அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி நீடிப்பு

இலங்கை அருகே மையம் கொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி இலங்கை நிலபரப்பு மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் நீடித்து வருகிறது.  இலங்கை நிலைபரப்பில் இருப்பதால் வலு குறைந்து காணபடுகிறது.  அடுத்த 12 – 24 மணி நேரங்களில் மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் நகர வாய்ப்பு உள்ளது.  tamil_1

டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்த நிலை மேலும் நீடிக்க கூடும்.  குறிப்பாக நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரையிலான கடலோர பகுதிகளில் மழை சற்றே பலமாக இருக்க கூடும்.  அடுத்த 12 – 24  மணி  நேரங்களில் இந்த கலக்கம் எவ்வாறு பாதை மாறுகிறது என்பதை பொருத்து மழை அளவும் இடங்களும் மாற கூடும்.

tamil

இந்நிலையில் குறைந்த காலகட்டத்தை நோக்குவதே உசிதமான செயல்.  ஏனெனில் தமிழகத்தின் மழை நிலவரம் இந்த சலனம் மன்னார் வளைகுடா பகுதியில் அல்லது இலங்கைக்கு வடகிழக்கே நகர்வது பொருத்து முற்றிலும் மாற கூடும்.