ரோனு புயல் இன்று கரையை கடக்க கூடும்

வங்க கடலில் நிலவி வரும் ரோனு புயல் இன்று இரவு கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.  அழ்ந்த காற்று அழுத தாழ்வு மண்டலமாக இருந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை கொடுத்த இந்த சலனம் தற்பொழுது வட வங்க கடலில் ஓடிஸா மற்றும் மேற்கு வங்க கடற்பகுதியை ஒட்டி நிலை கொண்டுள்ளது.  இது மேலும் வலு பெறுவதற்கான சாத்தியகூறு சற்று குறைவே.

Weather_Update

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் மழை குறைந்து தெளிந்த வானிலை நீடித்து வருகிறது, பரவலாக வெப்ப நிலை குறைந்து சற்று மிதமான பகல் நேர வெப்பம் காணப்பட்டது.  இன்றும் தமிழகத்தில் பகல் நேர வெப்பம் சற்று குறைந்து காண கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  குறிப்பாக வட தமிழகத்தின் உட்புற பகுதிகளில் வெப்ப நிலை ஓரிரு டிகிரி குறைந்து இருக்க கூடும்.

சென்னையில் அதிக பட்ச வெப்ப நிலை 36 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும்.  வேலூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பகல் நேர வெப்ப நிலை 38 டிகிரி அளவை ஒட்டி நிலவ கூடும்.