கத்திரி வெய்யில் தமிழகத்தை வாட்டி வதைக்ககூடும்.

நேற்று வங்க கடலில் நிலவி வந்த ரோனு புயல் வங்கதேச கடலோர பகுதியில் கரையை கடந்தது.  கத்திரி துவங்கிய பின் வங்க கடலில் நிலவி வந்த சலனம் காரணமாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது.  இந்நிலையில் நேற்று தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை உயர்ந்து காணப்பட்டது குறிப்பாக வட தமிழக பகுதியில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக நிலவியது.   மாலை வரை கடற்காற்று இல்லாத நிலையில் வெப்ப நிலை 38 டிகிரி அளவில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் நீடித்தது.

Weather_Update

இந்த நிலை இன்றும் நீடிக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன தமிழகத்தின் உட்புற பகுதிகளில் பரவலாக வெப்ப நிலை 39 / 40 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும், வேலூர், திருச்சி, திருத்தணி போன்ற பகுதிகளில் பகல் நேர அதிக பட்ச வெப்ப நிலை 41 டிகிரி வரை எட்ட வாய்ப்பு உள்ளது.

சென்னை போன்ற வட கடலோர தமிழக பகுதிகளில் மேற்கத்திய தரைகாற்றின் ஆதிக்கம் இருக்க கூடும்.  இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல் காற்று வீச வாய்ப்பு உண்டு.   மேற்கத்திய தரை காற்றின் வலு சற்று அதிகமாக இருக்க கூடும் என்பதால் கடல்காற்று தாமதமாக வீச கூடும்.