வட தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம் நீடிக்கும்

கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் வெப்பம் பரவலாக அதிகரிக்க துவங்கி உள்ளது.  கடந்த வாரம் ரோனு புயல் காரணமாக கிழக்கு கடலோர பகுதிகளில் வெப்பம் குறைந்தே காணப்பட்டது.   அனால் ரோனு புயல் காற்றின் திசையை கிழக்கில் இருந்து மேற்கு திசைக்கு மாற்றி உள்ளது.  தென்மேற்கு பருவ மழை காலம் துவங்க ஏதுவாக கீழை காற்று மேலை காற்றாக மாற வேண்டும்.  கோடைகாலங்களில் வங்க கடலில் ஏற்படும் சலனமே பல ஆண்டுகளில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும்.  இந்த ஆண்டு ரோனு புயல் இந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Weather_Update_1

இன்று வட தமிழகத்தின் சில பகுதிகளில் தெளிந்த வானம் காணப்படும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன இந்த தெளிந்த வானம் வெப்பத்தின் தாக்கத்தை அதிகரிக்க கூடும்.  இதே போல் தரை காற்று மேற்கு / வடமேற்கு திசையில் இருந்து வீச கூடும் என்பதால் தரை வெப்பமும் அதிகரிக்க கூடும்.  இந்த இரு காரணிகள் சேர்ந்து வட தமிழகத்தில் இன்று வெப்ப அலை தாக்கத்தை உருவாக்க கூடும்.

Weather_Update_2

குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் அதிக பட்ச வெப்ப நிலை 42  டிகிரியை தாண்ட கூடும்.  ஓரிரு இடங்களில் 43  டிகிரி வரை எட்ட வாய்ப்பு உள்ளது.  இதே போல் வேலூர் மாவட்டத்திலும் பரவலாக வெப்ப நிலை 41 / 42 டிகிரி அளவை ஒட்டி நிலவ கூடும்.

சென்னையிலும் வெப்ப நிலை 40  டிகிரி அளவை ஒட்டி நிலவ கூடும்.  சென்னையில் மேற்கு புறநகர் பகுதிகளான ஆவடி போன்ற இடங்களில் வெப்ப நிலை 42 டிகிரி அளவில் இருக்க கூடும்.  முடிந்த வரை பகல் பொழுதில் வெளியே செல்வதை தவிர்க்கவும்