வட தமிழகத்தில் கடும் வெப்பம் – இன்றும் தொடரும்

வட தமிழகத்தில் கடந்த சில தினங்களாக உயர்ந்தே காணப்படும் வெப்ப நிலை நேற்று பரவலாக சுட்டெரித்தது.  சென்னையின் இரு வானிலை மையங்களிலும் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி அளவை தாண்டியது.  திருத்தணியில் அதிகபட்சமாக 42 டிகிரி அளவு நேற்று பதிவான வெப்ப நிலை தமிழகத்தில் 15  இடங்களில்100° பாரேன்ஹீட் அளவை தாண்டியது.

மேற்கு மற்றும் வட மேற்கில் இருந்து வீசும் தரை காற்று காரணமாக பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக காணபடுகிறது.  இதே நேரத்தில் மேற்கத்திய காற்று பலத்துடன் இருப்பதால் கிழக்கில் இருந்து வீசும் கடற்காற்று கரையின் உட்புறம் நோக்கி செல்ல மிகவும் இயலாமல் இருக்கிறது.  கடலை ஒட்டிய பகுதிகளில் பகல் 1:00 / 2:00 மணி அளவில் பதிவாகும் அதிகபட்ச வெப்ப நிலை கரையில் இருந்து சற்று தள்ளி இருக்கும் பகுதிகளில் மாலை 3:00 மணிக்கும் மேல் வெப்ப நிலை குறையாமல் உயர்ந்து நிலவுகிறது.

Weather_Update

இன்றும் சென்னையில் பகல் நேர வெப்ப நிலை 40 டிகிரி அளவை ஒட்டியே இருக்க கூடும். மேற்கு பகுதியில் இருக்கு புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் வெப்ப நிலை 42 டிகிரி வரை உயர கூடும்.  இதே போல் திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் ஆகிய இடங்களிலும் பகல் நேர வெப்ப நிலை 42 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும்.

Weather_Update_1