வட கடலோர தமிழத்தில் வெப்ப தாக்கம்

கடந்த சில தினங்களாக வட தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த 4 / 5 தினங்களாக பகல் நேர அதிக பட்ச வெப்பநிலை 38 / 39 டிகிரியை ஒட்டியே உள்ளது.

இந்த நிலை மேலும் சில தினங்களுக்குக்கு தொடர கூடும்.  சென்னை இன்று பகல் நேர வெப்பமாக 40 டிகிரியை தொடக்கூடும்.

15063012_2_2918
வட தமிழகத்தின் உட்புற பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மாலை / முன்னிரவு நேரங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது.  இன்றும் வட உட்புற பகுதிகளில் ஓரிரு இடங்களில் மாலை வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய கூடும்.