வட கடலோர தமிழகம் – வெப்ப அலை வீச்சு

கடந்த சில தினங்களாக வட கடலோர பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை மிக அதிகமா நிலவி வருகிறது.  நேற்று கடலூர், புதுவை மற்றும் சென்னையில் அதிக பட்ச வெப்பம் 40 டிகிரியை தாண்டியது.

புதுவையில் நேற்று அதிக பட்சமாக 40.9 டிகிரி பதிவாகியது.  இது புதுவை வரலாற்றில் ஜூலை மாதத்தில் பதிவாகிய மிக அதிக வெப்பம் ஆகும். 2006ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னையில் ஜூலை மாதம் 40 டிகிரி பதிவு ஆகவில்லை. ஆனால் இந்த ஆண்டு இரு நாட்கள் 40 டிகிரி தாண்டி உள்ளது. மேலும் வரலாற்றின் மிக அதிக ஜூலை மாத வெப்ப நிலையான 41.1 டிகிரி வரை எட்ட கூடிய வாய்ப்பு இன்னும் ஓரிரு நாட்களுக்கு உள்ளது

Weather_map

வட மேற்கிலிருந்து வரும் கடுமையான வெப்ப தரைக்காற்று காரணமாகவே இந்த வெப்ப அலை நிலவி வருகிறது. மேலும் கடற்காற்று தாமதமாகவும் வலு இல்லாமலும் இருப்பதால் பகல் நேர வெப்ப நிலை குறையாமல் உள்ளது.  மேலும் சில தினங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் .