மேற்கு உட்புற தமிழக பகுதிகளில் மழை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.  நேற்று முன் தினம் தமிழகத்தின் உட்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கிருஷ்ணகிரி வேலூர், மற்றும் சேலம் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.  Weather_Update

இன்று வெப்ப நிலை தமிழகத்தில் பரவலாக இயல்பு நிலையை ஒட்டியே இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் வெப்ப நிலை மிகவும் குறைந்து காணப்பட்டது.  நேற்று தமிழகத்தில் தூத்துக்குடியில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியது.  மே / ஜூன் மாதங்களில் தூத்துக்குடி தமிழகத்தில் மிக வெப்பமான இடமாக இருப்பது மிகவும் அரிது.  இன்றும் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் சற்று மேக மூட்டமான வானிலை காரணமாக சென்னை போன்ற இடங்களில் வெப்ப நிலை 37 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும்.  இந்த மேக மூட்டமான வானிலை காரணமாக ஈரப்பதம் அதிகமாக நிலவ கூடும் இதன் காரணமாக சற்றே சங்கடமான இருக்க கூடும்.

Weather_Update_1

மேற்கில் இருந்து வரும் விடுபட்ட வானிலை ஈரம் காரணமாக இன்று மேற்கு தமிழகத்தின் உட்புற பகுதிகளில் இடி மழை வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது.  இதே போல் வேலூர் போன்ற வட உட்புற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மழை நிலவ கூடும்.   காற்றின் திசை மற்றும் வேகம் பொருத்து இந்த இடி மேகங்கள் வடக்கு கடலோர தமிழக பகுதிகளில் வர வாய்ப்பு உள்ளது.