வட தமிழக பகுதிகளில் மழை, இன்றும் தொடர வாய்ப்பு

நேற்று கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக நெய்வேலி பகுதியில் 5 செ.மீ. அளவு மழை பதிவாகியது. இதே போல் சேலம் மாவட்டஹில் சில பகுதிகளிலும் மழை பதிவாகியது.

 

Weather_Update_2

கடந்த சில தினங்களாக உட்புற பகுதிகளில் மழையின் சாத்தியகூறு அதிகமாக நிலவி வந்தது. வெப்ப சலனம் காரணமாக நிலவும் கோடை மழை பரவலாக உட்புற பகுதிகளில் அதிகமாக பெய்யவே வாய்ப்பு அதிகம்.  உட்புற பகுதிகளில் உருவாகும் இடி மழை காற்றின் திசை பொருத்து கடலோர பகுதிகளில் சில இடங்களில் மாலை அல்லது முன்னிரவு நேரங்களில் மழை பதிவாகும்.

Weather_Update_1

தற்பொழுது வங்க கடலோர மற்றும் ஆந்திர கரையோர பகுதியில் நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக வட கடலோர தமிழக பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  காற்றின் திசை பொருத்து சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற புறநகர் பகுதிகளில் சில இடங்களில் இன்று மழை பெய்ய கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. தற்பொழுது நிலவும் வானிலை படிவங்களின் கூற்றுப்படி சென்னைக்கு தெற்கே இந்த மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்க கூடும்.  மழை மேகங்கள் உருவாகும் வரை காற்றின் திசை எவ்வாறு இருக்கும் என்பதை கணிப்பது கடினம்.

Weather_Update