தென்மேற்கு பருவ மழை காலம் – தற்பொழுது வரை

தென்மேற்கு பருவ மழை சராசரியாக ஜூன் மாதம் முதல் நாள் அளவில்இ ந்திய கரையை அடையும்.  ஆனால் இந்திய துனைகண்டத்தில் அந்தமான் பகுதிகளில் மே மாதம் 15ஆம் தேதி அளவில் ஆரம்பித்துவிடும். இந்த ஆண்டு அந்தமான் பகுதிகளில் மே மாதம் 18ஆம் தேதி அளவிலும் கேரளா கரையை ஜூன் மாதம் 9ஆம் தேதி அன்றும் தென்மேற்கு பருவமழை அடைந்தது.  இந்திய துனைகன்டத்தை அடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்பொழுது உள்ள நிலையை எடுத்து காட்டவும் அவ்வபொழுது தென்மேற்கு பருவமழையின் முன்னேற்றத்தையும் பதிவு செய்யும் நோக்காக இந்த பதிவுகள் இருக்கும்.

swm_tamil_௧

தென்மேற்கு பருவ மழையின் ஆதிக்கம் தென் இந்தியாவில் மட்டும் இருப்பதை இந்திய வானிலை துறை தொகுத்து வரும் பிராந்திய மழை அளவு தொகுப்பு கோடிட்டு காட்டுகிறது.  தென் இந்திய தீபகற்ப பகுதி மட்டுமே சராசரி அளவை விட அதிகமாக பதிவாகி உள்ளது. ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அளவு குறைந்தே பதிவாகியுள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் சராசரி அளவை விட மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது.

வங்காள விரிகுடாவில் தென்மேற்கு பருவமழை அடைந்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் வங்கதேசத்தின் கிழக்கு பகுதியில் முற்றிலும் பரவி இருக்கும்.  ஆனால் இந்த ஆண்டு தற்பொழுது உள்ள நிலையில் வங்ககடல் பகுதியில் பர்மாவின் தெற்கு பகுதிகள் வரையிலே அடைந்து உள்ளது.  இதுவே கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகளில் சராசரி அளவை காட்டிலும் குறைந்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த மாதம் பெய்து வரும் மழை பரவலாக இடி மேகங்களே காரணம்.  இவை கேரளா பகுதியில் பெய்யும் பருவ மழை போல் அல்லாமல் குறைந்த நேரமே  நீடிக்கும்.  கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மாத்திரமே பருவ மழை போல் மழை பதிவாகும்.

swm_tamil

ஏனைய இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை பரவலாக வீரியம் குறைந்து உள்ளபோதும் தமிழகத்தில் இந்த மாதத்தில் மழை அளவு பரவலாக சராசரி அளவை விட அதிகமாகவே பெய்து உள்ள போதிலும் சில மாவட்டங்களில் மழை அளவு மிகவும் குறைந்து பதிவாகி உள்ளது குறிப்பாக புதுவை பகுதியில் மிகவும் குறைந்தே பெய்து உள்ளது.