தென்மேற்கு பருவ மழை நிலவரம் – தமிழகம் (ஜுலை16வரை)

தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு ஜுலை 16 வரை தமிழகத்தில் சராசரி அளவை காட்டிலும் 11% குறைவாக பெய்து உள்ளது

தென் இந்தியாவில் பல இடங்களில் சற்று குறைந்தே இது வரை பெய்து உள்ள தென் மேற்கு பருவ மழை இந்த மாத இறுதியில் சற்றே வலு அடைந்து பற்றாக்குறை அளவு குறைய கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அதிக மழை பெய்துள்ள மாவட்டங்களை நாம் ஆராய்ந்தால் வேலூர் தவிர அனைத்துமே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ஆகும். இதில் சற்று கூர்ந்து நாம் கவனித்தோம் எனில் கோவை மற்றும் தேனி மாவட்டங்கள் சராசரி அளவை காட்டிலும் அதிக அளவு மழை சந்தித்து உள்ளது. வேலூர் சராசரி அளவை காட்டிலும் சற்று குறைந்தும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் சராசரி அளவை விட சற்றே அதிகமாக மழை பெய்து உள்ளது.

Capture

மிக குறைந்த மழை பெய்து உள்ள மாவட்டங்களில் இரண்டு தென் கிழக்கு பகுதியில் உள்ள ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் சராசரி அளவை ஒட்டியே உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சராசரி அளவை காட்டிலும் மிக குறைவாக மழை பெய்து உள்ளது

Capture

ஜுலை 16 வரை சராசரி அளவு மழை பெய்து உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை : 14
ஜுலை 16 வரை சராசரி அளவை விட மிக அதிக மழை பெய்து உள்ள மாவட்டங்களில்எண்ணிக்கை : 4
ஜுலை 16 வரை பற்றாக்குறை மழை பெய்து உள்ள மாவட்டங்களில்எண்ணிக்கை : 12
ஜுலை 16 வரை சொற்ப மழை பெய்து உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை : 2