வட கடலோர தமிழக பகுதிகளில் இன்று மழை வாய்ப்பு

நேற்று தமிழகத்தின் மேற்கு உட்புற மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பதிவாகியது.  குறிப்பாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் 8 செ.மீ. மழை பதிவு ஆகியுள்ளது.  இதேபோல் நாகபட்டினம் மாவட்டம் மணல்மேடு பகுதியில் 5 செ.மீ. அளவு இருந்தது. திருச்சி பகுதியிலும் சில இடங்களில் நல்ல மழை பெய்தது. Weather_Update2

ஓடிஸா கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக மத்திய இந்திய மற்றும் தென் தீபகற்பத்தின் வடக்கு பகுதிகளில் பரவலாக மழை பதிவு ஆகியுள்ளது.  தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பல இடங்களில் சற்றே மிதமான மழை நேற்று இரவு பதிவாகியது.

இந்த மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக தென் இந்தியாவின் மேற்கு கடலோர பகுதியில் தென்மேற்கு பருவ மழை மீண்டும் சற்று வலுப்பெற துவங்கி உள்ளது.  இன்று கடலோர கர்நாடகா மற்றும் ஷிவமோகா மற்றும் சிக்கமகளூர் பகுதிகளில் உள்ள மலை பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று வட கடலோர பகுதியில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா பகுதி முதல் தெற்கு ஆந்திர கடலோர பகுதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  இந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் சற்றே மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்றும் பகல் நேர வானிலை சற்று குறைந்தே காணப்படும்.  மதியம் / மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.