வட தமிழகத்தில் பரவலாக மழை, இன்றும் தொடர வாய்ப்பு

நேற்று வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.  விழுப்புரம், வேலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் இடி மழை பதிவு ஆனது.  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர், திருவள்ளூர் மாவட்டம் ஆர் கே பேட்டை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பதிவு ஆனது. சென்னையில் அதிகாலை சில இடங்களில் சற்று மிதமான மழை பெய்தது.

Weather_Update-1

நேற்று 10 டிகிரி பூமத்திய ரேகை அருகே இருந்த வகைக்கெழு பகுதி சற்று உயர்ந்து 11 டிகிரி அளவில் தற்பொழுது நிலை கொண்டுள்ளது.  இதே போல் வங்க கடல் பகுதியில் உள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சியும் சற்றே வடக்காக நகர்ந்து உள்ளது.  இதன் காரணமாக மழை பெய்ய கூடிய பகுதிகளும் சற்றே வடக்கில் நகர கூடும் என எதிர்பார்க்கலாம்.  இன்றும் வட தமிழகம் மற்றும் தென் ஆந்திராவில் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன

Weather_Update

சென்னையை பொறுத்த வரை பகல் நேரத்தில் வானம் சற்று மேக மூட்டமாக இருக்க வாய்ப்பு இருப்பதால் வெப்ப நிலை சற்று மிதமாகவே நிலவ கூடும்.  மாலை நேரத்தில் இடி மேகங்கள் உட்புற பகுதிகளில் உருவாக வாய்ப்பு உள்ளது.  இதன் திசையை பொருது சில இடங்களில் மழை பெய்ய கூடும்.