தமிழகத்தில் மழை தொடர்கிறது, சில இடங்களில் இன்றும் வாய்ப்பு

தமிழகத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் பல இடங்களில் மழை பெய்தது.  வட தமிழகத்தில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும்  உட்புற மாவட்டங்களில் சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய பகுதிகளிலும் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை மழை பெய்தது.  சென்னையில் மேற்கு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளில் சில இடங்களில் நேற்று மாலை மழை பெய்தது.  அண்ணா நகரில் உள்ள நமது தானியங்கி வானிலை மையம் 18 மிமீ அளவுக்கு மழை பதிவு செய்தது.

Weather_Update_2

வங்க கடலில் நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி தற்பொழுது வட தமிழகத்திற்கு கிழக்கு தென் கிழக்காக நிலை கொண்டுள்ளது.  இதன் காரணமாக இன்றும் வட தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக சென்னை மற்றும் புதுச்சேரி இடையே உள்ள பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Weather_Update

மேற்கு கடலோர பகுதிகளில் இன்றும் சில இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன குறிப்பாக கர்நாடகா மற்றும் தென் மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய கூடும்.

தமிழகத்தை பொறுத்த வரை வானம் பரவலாக மேக மூட்டமாக இருக்க கூடும் மேல் கூறியது போல் வட கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  பகல் நேர வெப்பம் பரவலாக சராசரி அளவை விட மிகவும் குறைந்தே இருக்க கூடும்.  சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டமாக இருக்க கூடும் ஒரு சில சமயங்கள் சாரல் மழை சில இடங்களில் பெய்ய கூடும்.