கேரளாவில் தென்மேற்கு பருவ மழை மீண்டும் வலுப்பெற வாய்ப்பு

கடந்த சில தினங்களாக கேரளாவில் தென்மேற்கு பருவ மழை சற்று தொய்வு அடைந்த நிலையில் இருந்தது.  இந்த நிலை நாளை / சனிக்கிழமை முதல் மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன

நாளை தென் தமிழகமும் தென் கேரளமும் நல்ல மழை பெரும் வாய்ப்பு உள்ளது.  இந்திய பெருங்கடலில் தெற்கே “ஆபேல்” வலுவிழந்து மறைந்த நிலையில் இந்திய பெருங்கடலின் தென் கோடியில் “1040 ஹெட்டா பாஸ்கல்” என்றநிலையில்  காற்று  மிகவும் வலுப்பெற்று இருப்பது, தென் மேற்கு பருவக்காற்று மீண்டும் வீறு கொண்டு வீசும்என்பதாய் பொருள்.

mas 200716 16LT

தென் தமிழகமும் கேரளமும் வெள்ளப்பெருக்கை கூட சந்திக்கலாம். அடைமழை உண்டு. இதுஇன்னும் 48 முதல் 72 மணி நேரத்திற்குள் நிகழலாம்.  மேலும் திபெத்திய பீட பூமி -கடல் மட்டத்தில் இருந்து 4500 மீட்டர்உயரத்தில் அமைந்து உள்ள மலை மேட்டுப் பகுதி. ஆசிய கோடை பருவமழை காலத்தில் இப்பீடபூமியில்  நிலவும் காற்று,   தரை சூட்டினாலும் / இடி மேகங்கள் வெளிவிடும் உள்ளுறை வெப்பத்தினாலும் சூடு ஏற்றப்பட்டு மேலெழுந்துசெல்லும்.  உயரே அது விரிந்து அதன் தென் பகுதி இந்திய பெருங்கடலில் “மொரிஷியஸ்” அருகில் மஸ்கரின் உயர்காற்றுமண்டலத்தில் இணையும்.  இது  “வால்கெர் காற்று சுழற்சி” ஆகும்.

cimss200716 18Z