தமிழகத்தில் பரவலாக மழை வாய்ப்பு

நேற்று தமிழகத்தில் சில இடங்களில் மீண்டும் மழை துவங்கியது.  வேலூர் மாவட்டம் விருஞ்சிபுரம் பகுதியில் 88 மிமீ அளவு மழை இன்று காலை வரை பதிவாகியது.  இதே போல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், விழுப்புரம் மாவட்டம் மைலம் பகுதியிலும் நல்ல மழை பெய்தது.  டெல்டா பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை நேற்று மாலை பதிவாகியது.

Weather_Update

இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  குறிப்பாக வட தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய நிலையற்ற தன்மை காரணமாக சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய கூடும்.   தெற்கு ஆந்திராவின்ஏ நெல்லூர்னை முதல் புதுச்சேரி வரையிலான கடலோர பகுதிகளிலும் மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.  தமிழகத்தின் பல இடங்களிலும் மழை பெய்ய வைப்பு உள்ளது.

மேற்கு கடலோர பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை மீண்டும் வீரியம் அடைய துவங்கி உள்ளது நேற்று கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. இன்று கேரளா மற்றும் தென் கர்நாடகாவின் சில பகுதிகளில் கன மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக நீலகிரி மற்றும் வால்பாறை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய கூடும்.